என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தாண்டில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
    X

    புத்தாண்டில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

    • விதி மீறியதால் நடவடிக்கை
    • 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புத்தாண்டை கொண்டாடும் வகையில் திருவண்ணாமலை மாட வீதியில் காந்தி சிலை எதிரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் தலைமையிலான போலீசார் கேக் வெட்டி கொண்டாடினர்.

    அப்போது போலீசார் பொதுமக்கள் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறினர்.

    புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் நடத்திய சோதனையில் மது அருந்தி விட்டு வாகனங்கள் இயக்கியது, அதிவேகமாக வாகனங்களை இயக்கியது போன்ற விதி மீறல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×