என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேத்துப்பட்டு அடுத்த கல்யாணபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா யண எடுத்த படம்.
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- 108 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கல்யாணபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் புதியதாக கட்டி, பஞ்ச வர்ணம் பூசி, இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசங்கள் வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து கோ பூஜை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ஆகிய மூன்று கால யாக பூஜைகள் செய்து.மேளதாளத்துடன் புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் சேத்துப்பட்டு, கோட்டுப்பாக்கம், மடம், வந்தவாசி, சென்னை, மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.இரவு இன்னிசை கச்சேரி, பக்தி பாடல்கள், கிராமிய தப்பாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.






