என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீர்த்தவாரி
    X

    சூரிய கிரகணத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீர்த்தவாரி

    • சூரிய கிரகணத்தையொட்டி நடந்தது
    • அக்னி தலம் என்பதால் கோவில் மூடப்படவில்லை

    திருவண்ணாமலை :

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 5.17 முதல் 6.24 மணி வரை சூரிய கிரகணம் வருவதால் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாரின் அம்சமான அஸ்திர தேவதை யை பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருள செய்து சரியாக 5.17 மணி அளவில் பிரம்ம தீர்த்த குளக்கரையில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு மகா தீர்த்தவாரி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து அஸ்திர தேவதைக்கு பச்சரிசி மாவு அபிஷேக பொடி பால் தயிர் விபூதி சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்பு புனித கலச நீரை ஊற்றி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பஞ்ச கிளை என்று அழைக்கப்படுகின்ற மகா தீப ஆராதனை நடைபெற்றது.

    சூரிய கிரகண நேரத்தில் அனைத்து கோவில்களும் மூடப்படும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி தலம் என்பதால் கோவில் நடை சாற்றுவது கிடையாது. இந்த கோவிலில் சூரிய கிரகணம் ஆரம்பிக்கும் முன்பு தீர்த்த வாரியும் சந்திர கிரகணம் முடிந்த பின்பு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

    Next Story
    ×