என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் விளக்குகள் எரியாமல் இருட்டாக கிடக்கும் கிரிவலப்பாதை.
மின்விளக்கு எரியாததால் இருளில் தவிக்கும் கிரிவலப்பாதை
- நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்
- இரவு நேரத்தில் பெண்கள் கிரிவலம் செல்ல அச்சம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரவு பகல் பாராமல் கிரிவலம் செல்கின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி 14 கிலோமீட்டர் தொலைவிலும் ஆங்காங்கே மின்விளக்குகள் அமைக்கப்பட்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கிரிவலப் பாதையில் உள்ள காஞ்சி சாலையில் குபேர லிங்கம் முதல் அபயம் மண்டபம் வரை கடந்த சில நாட்களாக மின் விளக்குகள் எரியாததால், இருளில் மூழ்கியுள்ளது.
இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் இரவு நேரத்தில் பெண்கள் கிரிவலம் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






