என் மலர்
உள்ளூர் செய்திகள்

படவேடு ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில் ரூ.46 லட்சம் வசூல்
- 537 கிராம் தங்கம், 687 கிராம் வெள்ளியும் கிடைத்தது
- 100 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் கடந்த 23-ம்தேதி 11 காணிக்கை உண்டியல்கள் திறக்கும் பணி உதவி ஆணையர் ஜோதிலட்சுமி மேற்பார்வையில் நடைபெற்றது.
செயல் அலுவலர் சிவஞானம், மேலாளர் மகாதேவன், கணக்காளர் சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர்.
இதில் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியை செய்தனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.46,31,674 பணமும், 537கிராம் தங்கமும், 687 கிராம் வெள்ளியும் செலுத்தியிருந்தனர்.
Next Story