என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிலைய பூங்காவில் மரக்கன்று நடப்பட்டது
    X

    புதிய பஸ் நிலைய பூங்காவில் மரக்கன்று நடப்பட்டது

    • வந்தவாசியில் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி நகர திமுக சார்பில், திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா நகரச் செயலர் எ.தயாளன் தலைமையில் நடைபெற்றது.

    இதையொட்டி திமுக மாவட்ட அலுவலகம், எம்எல்ஏ அலுவலகம்,

    நகராட்சி அலுவலக வளாகம், தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற விழாவில் திருவண்ணா மலை வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ.ஆகியோர் அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் வந்தவாசி புதிய பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நகர செயல்வீரர்கள் கூட்டத்தில் பொட்டி நாயுடு தெரு மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்து கொண்டனர்.

    விழாவில் மாவட்ட ஒன்றிய, நகர கிளைகழக நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×