என் மலர்
உள்ளூர் செய்திகள்

போளூர் நற்குன்று ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் அஷ்டபந்தன சிலை திறப்பு விழா நடந்தது.
ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் அஷ்டபந்தன சிலை திறப்பு
- தமிழ் முறைப்படி வேள்விகள் நடைபெற்றது.
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் அமைந்துள்ள நற்குண்று ஸ்ரீ பால முருகன் கோவிலில் நுழைவாயில், திருச்செந்தூர் சண்முகநாதர், நவக்கிரக சிலைகள், கைலாயநாதர் சிலைகள் போன்ற புதிதாக அமைக்கப்பட்டு அஷ்டபந்தனம் நடைபெற்றது.
இதில் முன்னாள் எம்எல்ஏ வும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான கே.வி.சேகரன் தலைமை தாங்கி திருச்செந்தூர் சண்முகநாதர் சிலையை திறந்து வைத்தார்.
நுழைவுவாயிலை போளூர் 18-வது வார்டு கவுன்சிலர் கவிதா கருணாகரன் திறந்து வைத்தார், கைலாய நாதரை டாக்டர் சுகந்தி அன்பரசு திறந்து வைத்தனர். நவகிரக சிலைகளை கோயில் தலைவர் ஆர்.ராமச்சந்திரன் திறந்துவைத்தார், அலுவலக கட்டிடத்தை கோயில் தர்மகத்தா செல்வம் திறந்துவைத்தார்.
அதற்கு முன்னதாக விடியற்காலை தேவிகாபுரம் சைவ சித்தாந்த ரத்தினம் தலைமையில் தமிழ் முறைப்படி வேள்விகள் நடைபெற்றது. கைலாய வாத்திய குழுவினால் இசை கச்சேரி நடைபெற்றது. கிருத்திகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் போளூர் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம் முன்னாள் நகர செயலாளர் உலகநாதன் கோவில் துணைத் தலைவர் கருப்பன், செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மண்ணு சண்முகம் சாமிகள் செய்திருந்தார்.






