search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம்
    X

    இடிந்த நிலையில் அங்கன்வாடி மையம், நூலக கட்டிடத்தில் ஒரே அறையில் படித்து வரும் மாணவர்கள்.

    இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம்

    • சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    வந்தவாசி :

    வந்தவாசி அடுத்த சேதுராகுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.

    இப்பள்ளியில் 35-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கட்டிடம் சேதம் இந்த நிலையில் இப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக பள்ளி கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையம் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

    இந்த நிலையில் பள்ளியின் கட்டிடத்தில் மேல் புறத்தில் இருந்து சிமெண்ட் பூச்சுகள் அடிக்கடி கீழே விழுவதால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் அதே கிராமத்தில் அருகிலுள்ள நூலக கட்டிடத்தில் கடந்த ஒரு வருடமாக படித்து வருகின்றனர்.

    மாணவர்கள் அச்சம் நூலக கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாத ஒரே அறையில் அடைத்து வைத்து படித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    மேலும் இடிந்து கீழே விழும் அங்கன்வாடி மையத்தில் மட்டும் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் ஆகிய 2 பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×