என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்
    X

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

    • புதிதாக பொறுப்பேற்ற உதவி கலெக்டர் அனாமிகா தகவல்
    • பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையான கூட்டங்கள் நடத்தப்படும்

    செய்யாறு:

    செய்யாறில் நேற்று முன் தினம் ஆர். அனாமிகா உதவி கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின் அவர் கூறியதாவது:-

    பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும். எந்த நேரத்திலும் பொதுமக்கள் பொது பிரச்சினைக்காக என்னை சந்திக்கலாம். கடந்த பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள மக்கள் குறைதீர் கூட்டங்கள், நகர வடிவமைப்பு கூட்டம், விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முறையான கூட்டங்கள் நடத்திட நடவடிக்கைகள் இவ்வாறு கூறினார்.

    செய்யாறு உதவி கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஆர்.அனாமிகா சென்னையை பூர்விகமாக கொண்டவர்.

    இவருடைய தந்தை ரமேஷ் சந்த் மீனா இந்திய ஆட்சிபணித்துறை அதிகாரியாக பணியாற்றியவர்.அனாமிகா முதுநிலை தொழில் நிர்வாக இயலில் அகமதாபாத்தில் பயின்று, பி டெக் பாடப்பிரிவை திருச்சியில் பயின்றவர்.

    அனாமிகா தன்னுடைய பணியை திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி கலெக்டர் பயிற்சி 22 மாதங்கள் பணியாற்றியும், புது டெல்லியில் நிதி அயோக்கில் 4 மாதம் உதவி செயலாளராக பணியாற்றியும், தற்போது செய்யாறு சப் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×