என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜமாபந்தி நடந்த இடம் வெறிச்சோடி கிடந்த காட்சி.
முதல் நாளிலேயே வெறிச்சோடிய ஜமாபந்தி
- கோரிக்கை மனுக்களை அலுவலரிடம் வழங்கினர்
- வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் தாலுகா அலுவலகத்தில் பசலி வருவாய் தீர்வாய் ஜமாபந்தி முதல் நாள் நேற்று தொடங்கியது.
மேல்பள்ளிப்பட்டு உள்வட்டத்திற்கு உட்பட்ட மேல்வணக்கம்பாடி, ஆண்டிபட்டி, நீப்பத்துறை உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. ஜமாபந்தி குறித்து போதுமான தகவல் கிராம பகுதிகளில் பொது மக்களுக்கு தெரிவிக்கா ததால் ஜமாபந்தி வெறிச்சோடி காணப்பட்டது.
பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, இருக்கை வசதிகள் முறையாக செய்து தராததால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் அவதிக்குள்ளாகினர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) வ.தேன்மொழி ஜமாபந்தி அலுவலராக கலந்து கொண்டார்.
செங்கம் தாசில்தார் முனுசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேணுகா, வட்ட வழங்க அலுவலர் முனுசாமி, துணை தாசில்தார்கள் துரைராஜ், தமிழரசி, வருவாய் ஆய்வாளர் சீதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மேல்பள்ளிப்பட்டு உள்வட்டத்திற்குட்பட்ட கிராமத்திலிருந்து குறைவான அளவில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் வழங்கினர்.
இதில் வேளாண்மை துறை, நெடுஞ்சாலை துறை உள்பட அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், குணாநிதி, முரளி, சங்கமித்ரா, சத்யா, நேரு உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கிராம நிர்வாக அலுவலர் குணாநிதி நன்றி கூறினார்.






