என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் சிறந்த நிர்வாகத்திற்கான விருது பெற ஒத்துழைப்பு அளித்த மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கு விருது, சான்று வழங்கிய காட்சி.
வேங்கிக்காலில் 13-வது சாதாரண குழு கூட்டம்
- ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கு விருது
- கலெக்டர் வழங்கினார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழுவின் 13-வது சாதாரண குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி வரவேற்றார்.
கூட்டத்தில் இந்திய அரசின் 75-வது வெள்ளிவிழா சுதந்திர தினவிழாவை போற்றும் வகையில் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் சார்பில் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சியின் சிறந்த நிர்வாகம், வளர்ச்சி, சமூக சேவையை பாராட்டி தேசிய அளவில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கு தீன்தயாள் உபாத்யாய் பஞ்சாயத்து சசக்திகரன் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
இந்த மத்திய அரசின் விருது பெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களும், அலுவலக பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தும்,
இவ்விருதினை பெற்றதற்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியதோடு திருவண்ணாமலை மாவட்டம் பல்வேறு விருதுகளை பெற வேண்டுமென வாழ்த்தியமைக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழக அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க மற்றும் நலத்திட்டங்கள் வழங்க திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் சிறந்த நிர்வாகம், வளர்ச்சி சமூக சேவையை பாராட்டி தேசிய அளவில் விருது பெற ஒத்துழைப்பு அளித்த திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணை தலைவர், ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்களை கவுரவிக்கம் வகையில் விருது மற்றும் பாராட்டு சான்று வழங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சரவணன், ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.