என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
உடுமலை பஸ் ஸ்டாண்டில் செல்போன் திருடிய வாலிபருக்கு தர்ம அடி
- மூணார் செல்லும் பேருந்துக்காக உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
- வாலிபரை பிடித்து விசாரித்த போது செல்போனை திருடியது தெரியவந்தது.
உடுமலை :
கேரள மாநிலம் மூணார் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவர் நேற்று முன்தினம் இரவு மூணார் செல்லும் பேருந்துக்காக உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அதிகாலையில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் பேருந்து நிலையத்திலேயே தூங்கி உள்ளார். அதிகாலையில் நவீன் குமார் எழுந்து பார்த்த போது அவரது பேக்கில் வைத்து இருந்த செல்போன் திருடு போனது தெரியவந்தது. செல்போனை தொலைத்த நவீன் குமார் கதறி அழு தது பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல பஸ் நிலையத்தில் தாங்கி இருந்த வேலூரை சேர்ந்த ஆசிக் அலி (43) என்பவரிடம் செல்போன், ரூ.15,000 பணம் திருடு போனது. இதை தொடர்ந்து சக பயணிகள் நவீன்குமாருக்கு உதவி செய்யும் வகையில் அவருடன் அருகே படுத்து இருந்த மற்றொரு வாலிபரை பிடித்து விசாரித்த போது செல்போனை திருடியது தெரியவந்தது. பொதுமக்கள் அவரை போலீஸிடம் ஒப்படைப்பதற்காக உடுமலை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் சென்ற பிறகு போலீசார் பஸ் நிலையத்துக்கு வந்தனர். இதை அடுத்து பொதுமக்கள் திருடனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






