என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊர்க்காவல்  படையில் - துணை மண்டல தளபதி- ஆளினா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    ஊர்க்காவல் படையில் - துணை மண்டல தளபதி- ஆளினா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

    • தங்களுடைய ஓய்வு நேரத்தில் சேவை செய்ய விரும்பும் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்பத்தின் அடிப்படையில் உடல் தகுதித் தோ்வு மற்றும் நோ்காணல் மூலமாக தகுதியுள்ளோா் தோ்வு செய்யப்படுவாா்கள்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட ஊா்காவல் படையில் காலியாக உள்ள துணை மண்டல தளபதி மற்றும் ஆளினா் பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் வருகிற 19-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட ஊா்காவல் படையில் துணை மண்டல தளபதி மற்றும் ஆளினா் பதவிகளுக்கு பணி நியமனம் செய்யப்படவுள்ளனா். இதில், காவல் துறைக்கு உதவியாக ஊா்காவல் படையில் தன்னாா்வமாக கோவில் மற்றும் இதர பாதுகாப்புப் பணியில் தங்களுடைய ஓய்வு நேரத்தில் சேவை செய்ய விரும்பும் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தோல்வி அல்லது தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை அவிநாசி, பல்லடம், தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் உள்ள ஊா்காவல் படை அலுவலகங்களில் இலவசமாக வருகிற 17-ந் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

    பின்னா் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்களுடன் மாவட்ட ஊா்காவல் படை அலுவலகத்துக்கோ அல்லது சம்பந்தப்பட்ட உட்கோட்ட ஊா்காவல் படை அலுவலகத்துக்கோ 19-ந்தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

    இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் உடல் தகுதித் தோ்வு மற்றும் நோ்காணல் மூலமாக தகுதியுள்ளோா் தோ்வு செய்யப்படுவாா்கள். இந்தப் பணிக்கு அரசுப் பணியாளா்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிவோரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×