என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி
- பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை பாண்டியன் வரவேற்றார்.
- அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரம் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர் வடக்கு மாவட்டசெயலாளர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார்.அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் உடுமலை சண்முகவேலு முன்னிலை வகித்தார்.பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை பாண்டியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கட்சி கொடி ஏற்றி வைத்தும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
Next Story






