என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடம் வட்டத்தில் பணியாற்றிய கிராம நிா்வாக அலுவலா்கள் திடீர் இடமாற்றம்
- பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.
- கழுவேரிபாளையத்தில் பணியாற்றிய பிரபுகுமாா் ப.வடுகபாளையத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.
பல்லடம் :
பல்லடம் வட்டத்தில் அ பிரிவு கிராமங்களில் ஓராண்டு காலத்துக்கு மேல் பணி முடித்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கும், ஆ பிரிவு கிராமங்களில் 3 ஆண்டு காலத்துக்கு மேல் பணி முடித்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். அதன் விபரம் வருமாறு:-
அ பிரிவு கிராமம் பருவாயில் பணியாற்றிய கோவிந்தராஜ் நெருப்பெரிச்சல் கிராமத்துக்கும், வே.கள்ளிப்பாளையத்தில் பணியாற்றிய குணசேகரன் வீரபாண்டிக்கும், காட்டூா்(குரூப்) பணியாற்றிய மகேஸ்வரன் பள்ளபாளையத்துக்கும், துத்தாரிபாளையத்தில் பணியாற்றிய சதாசிவம் பொங்கலூருக்கும், கழுவேரிபாளையத்தில் பணியாற்றிய பிரபுகுமாா் ப.வடுகபாளையத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.
ஆ பிரிவு கிராமம் கரைப்புதூரில் பணியாற்றிய முத்துபரமேஸ்வரி மங்கலத்துக்கும், பொங்கலூரில் பணியாற்றிய சிவசங்கா் அழகுமலைக்கும், பூமலூரில் பணியாற்றிய கோபி ஈட்டிவீரம்பாளையத்துக்கும், சுக்கம்பாளையத்தில் பணியாற்றிய சாந்தஷீலா கள்ளிபாளையத்துக்கும், புளியம்பட்டியில் பணியாற்றிய கலைவாணி கழுவேரிபாளையத்துக்கும், ப.வடுகபாளையத்தில் பணியாற்றிய சுகன்யா புளியம்பட்டிக்கும், நாரணாபுரத்தில் பணியாற்றிய மோகன்தாஸ் வடமலைபாளையத்துக்கும், பள்ளபாளையத்தில் பணியாற்றிய கெளரி கரைப்புதூருக்கும், கே.அய்யம்பாளையத்தில் பணியாற்றிய காா்த்திகேயன் கே.கிருஷ்ணாபுரத்துக்கும், சாமளாபுரத்தில் பணியாற்றிய ஞானசேகரன் பணிக்கம்பட்டிக்கும், பணிக்கம்பட்டியில் பணியாற்றிய ரேவதி கே.அய்யம்பாளையத்துக்கும், கே.கிருஷ்ணாபுரத்தில் பணியாற்றிய பூங்கொடி பருவாய்க்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.
இதற்கான உத்தரவை திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பிறப்பித்துள்ளாா். இடமாறுதல் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் புதிய கிராமங்களில் பொறுப்பேற்றுக்கொண்டனா்.






