search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நகராட்சி கூட்டம்
    X

    நகராட்சி தலைவர் மு.மத்தீன் தலைமையில் கூட்டம் நடைபெற்ற காட்சி. 

    உடுமலை நகராட்சி கூட்டம்

    • கூட்டத்தில் 50 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது.
    • ஒவ்வொரு மின் இணைப்பு உள்ள கட்டிடத்துக்குள் தனித்தனியாக பாதாள சாக்கடை வரி வசூலிக்கப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலையில் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நகராட்சித் தலைவர் மு.மத்தீன் தலைமையில் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் சத்தியநாதன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் 50 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது. உடுமலை நகராட்சிப்பகுதிகளில் நகராட்சி மூலம் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து குழாய்கள் மூலம் இணைப்பு வழங்கப்பட்டு ஏரிப்பாளையத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கென இணைப்புகளுக்கு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து துணைத்தலைவர் கலைராஜன் பேசியதாவது:- ஒன்றுக்கும் மேற்பட்ட சிறிய கடைகள் கட்டி வாடகைக்கு விடும்போது தனித்தனியாக மின் இணைப்பு பெறப்படுகிறது. அனைத்து கடைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ளது. ஆனால் ஒவ்வொரு மின் இணைப்பு உள்ள கட்டிடத்துக்குள் தனித்தனியாக பாதாள சாக்கடை வரி வசூலிக்கப்படுகிறது.

    அதுபோல பின்னால் ஒரு வீடு ,முன்புறம் சிறு கடை இருந்தாலும் தனித் தனியாக வரி விதிக்கப்படுகிறது. இது பொதுமக்களை கசக்கிப் பிழியும் நிலையாக உள்ளது. எனவே அதிகாரிகள் கள ஆய்வு செய்து கழிவறை மற்றும் குளியலறைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பாதாள சாக்கடைக்கான வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இந்த கூட்டத்தில் கலைவாணி, விஜயலட்சுமி, ஆறுச்சாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டு அடிப்படை தேவைகள் குறித்து பேசினர்.

    Next Story
    ×