search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம்  பிப்ரவரி மாதம் 1-ந்தேதி நடக்கிறது
    X

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் 1-ந்தேதி நடக்கிறது

    • கொடிமரத்துக்கு தங்கமுலாம் பூசிய செம்பு கவசம் அணிவிக்கப்பட உள்ளது.
    • கருவறை விமானம் புதுப்பிக்கும் பணியும், கருவறை சீரமைப்பு பணியும் நடக்க உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி(ஈஸ்வரன்) கோவில் கும்பாபிேஷக விழா பிப்ரவரி 1-ந்தேதி நடக்க இருப்பதால், பாலாலய பூஜைகள் நடந்தது.

    திருப்பூர் நல்லூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. கடந்த சில மாதங்களாக கோவில் திருப்பணி நடந்து வருகிறது. விரைவில் கொடிமரத்துக்கு தங்கமுலாம் பூசிய செம்பு கவசம் அணிவிக்கப்பட உள்ளது.

    கோவிலின் 15 கலசங்களும் தங்கமுலாம் பூசி பொலிவுபடுத்தப்பட உள்ளது. மொத்தம் 35 உபதாரர்கள் மூலம், 1.33 கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணி நடந்து வருகிறது. கோவில் கும்பாபிேஷக விழா பிப்ரவரி 1-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில் கருவறை விமானம் புதுப்பிக்கும் பணியும், கருவறை சீரமைப்பு பணியும் நடக்க உள்ளது. அதற்காக பாலாலய பூஜைகள் நடந்தன. முதல் கால யாக பூஜையும், இரண்டாம் கால வேள்வி பூஜைகளும் நடந்தன.

    ஸ்ரீவிஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன், விநாயகர், முருகர் சுவாமிகள், அத்திமரக்கட்டையில் செய்யப்பட்ட சிற்பங்களில், ஆவாஹணம் செய்யப்பட்டனர். பரிவார தெய்வங்கள், 29 கண்ணாடி பிரேம்களில் ஆவாஹணம் செய்யப்பட்டனர். இனி கும்பாபிேஷகம் வரை பாலாலய மூர்த்திகளுக்கு அன்றாட படி பூஜைகள் நடக்கும் என, சிவாச்சார்யார்கள் தெரிவித்தனர்.பாலாலய பூஜைகளில், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், திருப்பணி கமிட்டி பொறுப்பாளர் நாச்சிமுத்து, செயல் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×