search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டின் வளர்ச்சிக்கு  திருப்பூர் தொழில் துறையினர் உறுதுணையாக இருக்கின்றனர் - பியோ தலைவர் சக்திவேல் பேச்சு
    X

    பியோ தலைவர் சக்திவேல்.

    நாட்டின் வளர்ச்சிக்கு திருப்பூர் தொழில் துறையினர் உறுதுணையாக இருக்கின்றனர் - பியோ தலைவர் சக்திவேல் பேச்சு

    • திருப்பூரை பொறுத்தவரை வரி செலுத்தக்கூடிய தொழில் துறையினர் அதிகம் இருக்கிறார்கள்.
    • கடந்த காலங்களில் வருமான வரித்துறை ஏற்றுமதியாளர்களுக்கு உகந்ததாக இல்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில், வருமான வரி செலுத்துபவர்களுக்கான கார்ப்பரேட் இணைப்பு திட்டம் கருத்தரங்கு நடைபெற்றது. வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கோவை வருமான வரித்துறை இணை ஆணையர் ஸ்ரீ விஜய் வரவேற்றார்.கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்கள் பேசினர். இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் பேசியதாவது :- கடந்த காலங்களில் வருமான வரித்துறை ஏற்றுமதியாளர்களுக்கு உகந்ததாக இல்லை. தற்போது அந்தக் காலச் சூழ்நிலை மாறி நம்முடன் ஒன்றாக இணைந்து பயணிக்க கூடிய நட்பு சூழல் உருவாகியுள்ளது.திருப்பூரில் உள்ள ஆடிட்டர்கள் 24 மணி நேரமும் அவரவர் முதலா ளிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடக்கூடிய நல்லுள்ளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். முன்னர் இருந்ததை காட்டிலும் தற்போது உற்பத்தி தேவை அதிகரித்துள்ளது.

    வருமான வரி துறையினரின் அதிகாரிகள் அனைத்து வகையிலும் உற்பத்தியாளர்களுடன் நல்லுறவை வைத்துள்ளனர். ஏற்றுமதியாளர்களுக்கும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கும் நல்ல ஆதரவை தருகின்றனர். திருப்பூரை பொறுத்தவரை வரி செலுத்தக்கூடிய தொழில் துறையினர் அதிகம் இருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் பேசியதாாவது :- வருமான வரித்துறையினர் சில மாற்றங்களை நிச்சயமாக செய்து தர வேண்டும். உள்நாட்டு வர்த்தகம், 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அரசுக்கும் தொழில்துறையினருக்கும் மிகுந்த நல்லுறவை இது ஏற்படுத்தியுள்ளது. உலக சுற்றுச்சூழல் பசுமை திட்டத்தை நோக்கி திருப்பூர் வேகமாக பயணிக்கிறது.

    தொழில்நுட்ப காரணங்கள் பல்வேறு வகையில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதிப்பில் உள்ள டிரேசஸ் டிமாண்ட்களை வட்டி மற்றும் கால தாமத அபராததொகை இல்லாமல் செலுத்துவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.மத்திய பட்ஜெட்டில் குறு, சிறு நிறுவனங்களிடம் இருந்து வரும் இன்வாய்ஸ்களுக்கு, 45 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் செலவுத் தொகையை உரிமை கோர முடியாத நிலையில் உள்ளது. வரி செலுத்தக்கூடிய சுழற்சி முறை150 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை இருப்பதால் ஜி.எஸ்.டி., விதிகளில் இருப்பதை போல 180 நாட்கள் வரை கால அவகாசம் தந்தால் அனைவருக்கும் பயனாக இருக்கும் என்றார்.

    Next Story
    ×