என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசியில் திருப்பணி பாலாலய நிகழ்ச்சி
    X

    பாலாலய நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    அவினாசியில் திருப்பணி பாலாலய நிகழ்ச்சி

    • கும்பாபிஷேக திருப்பணிக்கான பாலாலய நிகழ்ச்சி நேற்று நடந்தது
    • பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவது என கோவில் நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அவினாசி :

    அவினாசி மங்கலம் ரோட்டில் பிரசித்தி பெற்ற ஆகாச இராயர் கோவில் உள்ளது இக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கான பாலாலய நிகழ்ச்சி நேற்று நடந்தது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2001 ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவது என கோவில் நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான பாலாலய நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் இந்த பாலாலய பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் அவினாசி, காசிகவுண்டன்புதூர், கருணை பாளையம், புதுப்பாளையம், பூல காட்டு பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×