என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கலெக்டரின் வாட்ஸ்-அப் எண் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
- தீா்க்க முடியாத பிரச்னைகள், அடிப்படை தேவைகள் தொடா்பாக மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.
- மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
திருப்பூர்:
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் அளிக்கும் வகையில் 97000-41114 என்ற வாட்ஸ் ஆப் எண் செயல்பட்டு வந்தது. இதில், அரசு சாா்ந்த உதவிகள், குற்றச்சாட்டுகள், தீா்க்க முடியாத பிரச்னைகள், அடிப்படை தேவைகள் தொடா்பாக மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.
ஆனால், கடந்த சில நாள்களாக வாட்ஸ் ஆப் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது. இது தொடா்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பூா் மாவட்டகலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 97000-41114 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் பொதுமக்கள் இன்று முதல் புகாா் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






