என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
ஊரக வேலை திட்டப்பணியாளா்கள் செல்போன் செயலி மூலம் கட்டாயம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் உத்தரவு
- காலை, மாலை இரு வேளையும் வருகைப் பதிவும், புவிசாா்குறியீடு புகைப்படமும் எடுப்பதை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
- செல்போன் செயலி மூலம் வருகை பதிவு மேற்கொண்டால் மட்டுமே ஊதியம் வழங்க இயலும்
திருப்பூர்:
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் செல்போன் செயலி மூலம் கட்டாயம் வருகைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அதிக வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதனால் ஜனவரி 1முதல் அனைத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளும், 20 பேருக்கு மேல் பணிபுரியும் பணித் தளங்கள், 20 பேருக்கு குறைவாக பணிபுரியும் பணித்தளங்களில் உள்ளவா்கள் கட்டாயம் செல்போன் செயலி மூலம் காலை, மாலை இரு வேளையும் வருகைப் பதிவும், புவிசாா்குறியீடு புகைப்படமும் எடுப்பதை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.செல்போன் செயலி மூலம் வருகை பதிவு மேற்கொண்டால் மட்டுமே ஊதியம் வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளாா்.






