search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி தொடக்கம்
    X

    கோப்புபடம்.

    பல்லடம் செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி தொடக்கம்

    • சாலை விரிவாக்க பணிக்காக கோவிலின் முன்புறம் இருந்த நவகிரகங்கள், மற்றும் சிலைகள் அகற்றப்பட்டது.
    • செல்வ விநாயகர் கோவிலில் பாலாலய பூஜை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் காந்தி ரோட்டில் செல்வ விநாயகர், பாலதண்டபாணி கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

    மேலும் காந்தி ரோடு சாலை விரிவாக்க பணிக்காக கோவிலின் முன்புறம் இருந்த நவகிரகங்கள், மற்றும் சிலைகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த சிலநாட்களுக்கு முன்பு செல்வ விநாயகர் கோவிலில் பாலாலய பூஜை நடைபெற்றது.தொடர்ந்து சுவாமி சிலைகள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டு, அருகே உள்ள பொன் காளியம்மன் கோவிலில் தனி அறையில் பாதுகாப்புடன் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தர்கள் வழிபடுவதற்காக அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு பக்தர்கள் சுவாமியை வழிபட்டுவருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்கிடையே கோவிலில் உள்ள ஆலமரத்தையும்,வேப்ப மரத்தையும், வேருடன் பிடுங்கி எடுத்து மாற்று இடத்தில் மறு நடவு செய்ய பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×