search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் தீவிரம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் தீவிரம்

    • திருப்பூர் மாவட்டத்தில் 5.85 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் கூட ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    வீட்டு மின் இணைப்பு, விவசாயம், குடிசை, விசைத்தறி, கைத்தறி உள்ளிட்ட தொழில் செய்வோர், மின்வாரியத்தின் மானியம் பெறுவோர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

    தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இணைப்பது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 5.85 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இதில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சார்ந்த மின் இணைப்புகள்போக, 4.25 லட்சம் மின் இணைப்பு எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க திருப்பூர் கோட்ட மின்வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    அதன்படி மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு 'கவுன்டர்கள்' திறக்கப்பட்டு பண்டிகை நாள் விடுமுறை தவிர்த்து, சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் கூட ஆதார் எண் இணைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருப்பூர் கோட்ட மின்வாரிய கண்காணப்பு பொறியாளர் ராஜகுமாரி (கூடுதல் பொறுப்பு) கூறுகையில், திருப்பூர் கோட்டத்தில் 4.25 லட்சம் மின் இணைப்பு எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டிய சூழலில் இதுவரை 40 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர். திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமே இணைத்துக் கொள்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மின்வாரிய அலுவலகம்சென்று இணைத்து கொள்கின்றனர். மக்களிடம் எவ்வித தயக்கமும் இல்லை என்றார்.

    சிறப்பு கவுன்டர்களில்ஆதார் இணைப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கூறுகையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதால், இலவச மின்சாரம் உள்ளிட்ட அரசின் எந்தவொரு சலுகையும் ரத்தாகாது என மின்துறை அமைச்சர் தெளிவுப் படுத்தியதை தொடர்ந்து அச்சம், தயக்கமின்றி இணைப்பு பணி மேற்கொள்கின்றனர் என்றனர்.

    Next Story
    ×