என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
வெங்காய பட்டறை அமைக்க விவசாயிகளுக்கு மானியம்
- ரூ. 87 ஆயிரத்து 500 விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
- நீர் இழப்பை குறைக்கவும் மல்சிங் சீட் வழங்கப்பட உள்ளது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - வெங்காய பட்டறை அமைக்க பொங்கலூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக ரூ. 87 ஆயிரத்து 500 விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அதுபோல் குழித்தட்டு காய்கறி நாற்றுகளான தக்காளி, மிளகாய், சுரை மற்றும் பழ வகைகளான கொய்யா, எலுமிச்சை, பப்பாளி ஆகியவை இலவசமாக 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
விவசாய நிலங்களில் களை வராமல் தடுக்கவும், நீர் இழப்பை குறைக்கவும் மல்சிங் சீட் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story






