search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் போலீசார் சார்பில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்
    X

    பல்லடம் மதிமுக., நகரச் செயலாளர் வைகோ பாலு, ஆதித்தமிழர் பேரவை பவுத்தன் போலீசாரிடம் மனு அளித்தக் காட்சி.

    பல்லடத்தில் போலீசார் சார்பில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்

    • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட 42 வழக்குகள் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.
    • கார் கண்ணாடியை சுத்தம் செய்ததாக கூறி வாகன ஓட்டிகளிடம் வற்புறுத்தி பணம் கேட்கின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட பல்லடம், மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், ஆகிய போலீஸ் நிலையங்களில் இடப் பிரச்சனை, பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனை, உள்ளிட்ட நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள புகார்களுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் தலைமையில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா முன்னிலையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட 42 வழக்குகள் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:- போலீஸ் நிலையங்களில் விசாரணை நடைபெறும் போது அரசியல், பணம் உள்ளிட்ட சக்திகளின் இடையூறு இருக்கும். ஆனால் இந்த முகாமில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. மேலும் போலீசார் பொதுமக்களை கனிவுடன் நடத்தினர். இது போன்ற முகாம்களை அடிக்கடி நடத்த போலீசார் முன் வர வேண்டும் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பல்லடம் சரஸ்வதி, மங்கலம் கோபால கிருஷ்ணன்,காமநாயக்கன்பாளையம் ரவி, அவிநாசி பாளையம் விஜயா, மற்றும் போலீசார் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் மதிமுக., நகரச் செயலாளர் வைகோ பாலு, ஆதித்தமிழர் பேரவை பவுத்தன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில் பல்லடம் நால்ரோடு சிக்னல், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிலர் கார் கண்ணாடிகளை தட்டி பிச்சை கேட்கின்றனர். கொடுக்க மறுத்தால் சாபம் இடுவதாகவும், இதனால் வாகன ஓட்டிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.

    மேலும் வட மாநிலங்களைச் சேர்ந்த சிலர் கார் கண்ணாடிகளில் சோப்பு தண்ணீரை பீய்ச்சி அடித்து,கண்ணாடியை சுத்தம் செய்ததாக கூறி வாகன ஓட்டிகளிடம் வற்புறுத்தி பணம் கேட்கின்றனர். எனவே போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×