search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிமதுரம் கலந்த பானங்களை அருந்த சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தல்
    X

    அதிமதுரம் கலந்த பானங்களை அருந்த சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தல்

    • காலையில் டீ, காபிக்கு பதிலாக, மஞ்சள், துளசி அல்லது அதிமதுரம் கலந்த பானங்களை அருந்தலாம்.
    • 7 மணி முதல் 8 மணிக்குள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக வயதானவர்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இது போன்ற சூழலில், ஆரோக்கியம் நிறைந்த இயற்கை உணவு எடுத்துக் கொண்டால் இப்பிரச்சினைகளை தவிர்க்கலாம் என சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில்,

    பருவநிலை மாற்றம், குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்படும் சமயங்களில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. காய்ச்சல், சளி, மூக்கடைப்பு, தும்மல், தலையில் நீர்கோர்த்தல், இருமல் உள்ளிட்ட பிரச்னைகள் தொற்றிக் கொள்கின்றன.

    இதனை தவிர்க்க காலையில் டீ, காபிக்கு பதிலாக, மஞ்சள், துளசி அல்லது அதிமதுரம் கலந்த பானங்களை அருந்தலாம். மிளகு, சீரகம் கலந்த உணவு எடுத்துக் கொள்ளலாம்.மதியம் மிளகு,கண்டங்கத்திரி, திப்பிலி, தூதுவளை போன்ற மூலிகைகளில் ரசம் வைத்து சாப்பிடும் போது கபம் போன்ற பிரச்சினைகள் வராது.

    இரவு நேரங்களில் 7 மணி முதல் 8 மணிக்குள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர சூரிய ஒளியில் நிற்பது, சுவாச பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வது சிறந்த பலனை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×