என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுகார்த்தி
மாநில இளைஞர் விழாவில் பங்கேற்க சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர் தேர்வு
- விழாவுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
- விழாவில் மொத்தம் 200 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்
திருப்பூர்:
தமிழ்நாடு பல்கலைக்கழக ங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் இருக்கும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொள்ளும் மாநில இளைஞர் விழா சென்னையில் நாளை (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். விழாவில் மொத்தம் 200 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இதில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து 14 மாணவர்கள் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 இளங்கலை இரண்டாமாண்டு வணிகவியல்மாணவர் மதுகார்த்திக்கும் ஒருவர். இவரை நேற்று சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணை ப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.






