search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகரிக்கும் வெப்பநிலை - சுகாதாரத்துறை அறிவுரை
    X

    கோப்புபடம்.

    அதிகரிக்கும் வெப்பநிலை - சுகாதாரத்துறை அறிவுரை

    • உடலில் நீர் சத்தை தக்க வைத்துக்கொள்வது முக்கியம்.
    • பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    அதிகரிக்கும் வெப்பத்தால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள, உடலில் நீர் சத்தை தக்க வைத்துக்கொள்வது முக்கியம். நீர் சத்து இழப்பு ஏற்படாமல் இருக்க அதிக தண்ணீரை அடிக்கடி அருந்த வேண்டும்.பொதுமக்களும் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், உப்பு, சர்க்கரை நீர் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவற்றை அருந்த வேண்டும். இது உடலில் நீர் சத்தை தக்க வைக்க உதவும். பழங்கள், காய்கறிகள் நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட்கொள்ளலாம்.

    காற்றோட்டமான இடங்களில் வசித்தல் அவசியம். வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்தல் நல்லது. குறிப்பாக குழந்தைகள், பெரியவர்கள் வெளியே செல்லாமல் இருக்கலாம். காலில் செருப்பு அணியாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர் பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×