என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரக்ஷா பந்தனையொட்டி திருப்பூரில் சகோதரர்களுக்கு சகோதரிகள் ராக்கி கயிறு கட்டிய காட்சி.
திருப்பூரில் ரக்ஷா பந்தன் விழா கொண்டாட்டம்
- பெண்கள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டியும், பரிசுப் பொருட்களை வழங்கியும் பாசத்தை வெளிப்படுத்தினர்.
- பாசத்தை காட்டும் ஒரு சமூக விழாவாகவே ரக்ஷா பந்தன் இருந்து வருகிறது.
திருப்பூர் :
சகோதரத்துவ திருவிழா எனப்படும் ரக்ஷா பந்தன் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பெண்கள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டியும், பரிசுப் பொருட்களை வழங்கியும் பாசத்தை வெளிப்படுத்தினர். வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா அண்ணன் தங்கை, அக்கா, தம்பி ஆகியோரின் ரத்த பந்தத்தை வலுப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. சகோதர பந்தத்தை எடுத்துக்கூறும் இந்த தினம் இந்துக்களின் பண்டிகை என்பதைத் தாண்டி பாசத்தை காட்டும் ஒரு சமூக விழாவாகவே இருந்து வருகிறது.
ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்றும், 'பாதுகாப்பு பந்தம்' என்றும் பொருள். இந்த நாளில், ஓர் ஆண் ரக்ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்கு கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாகக்கொண்டு அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகாப்பிற்கும், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும். இன்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு திருப்பூரில் வட மாநிலத்தினர் வசித்து வரும் பல வீடுகளில் சகோதரர்களுக்கு சகோதரிகள் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து ராக்கி கயிறு கட்டி வாழ்த்துக்களை பரிமாறினர்.