search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கேயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.79.80 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்
    X

    வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.

    காங்கேயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.79.80 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்

    • திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
    • காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடைபெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    காங்கயம்:

    காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.79.80 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டப்பணிகள் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடைபெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பாப்பினி ஊராட்சியில் அனைத்துக்கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்கினையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமூக சுகாதார வளாகத்தையும், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.57.47 லட்சம் மதிப்பீட்டில் ஈரோடு தாராபுரம் சாலை முதல் மடவிளாகம் வழியாக நட்டார்பாளையம் சாலை வரை தார் சாலை மேம்பாட்டுப் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.2.59 லட்சம் மதிப்பீட்டில் வரதப்பம்பாளையத்திலிருந்து தொட்டியபட்டி வரை இருபுறமும் சங்கன் பிட் அமைக்கும் பணியினையும், ரூ.2.59 லட்சம் மதிப்பீட்டில் பி.பச்சாபாளையம் முதல் பகவதி பாளையம் வரை இருபுறமும் சங்கன் பீட் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.79.80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஷ்குமார், காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாவதி, ஹரிகரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×