என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
மல்பெரி இலையில் பூச்சி கட்டுப்பாடு - அதிகாரி விளக்கம்
- 15 முதல் 20 சதவீதம் மகசூல் குறைவதால் விவசாயிகளுக்கு பொருளாதார சேதம் ஏற்படுகிறது.
- பட்டுப் புழுக்களின் உணவுக்காக மல்பெரி செடி சாகுபடி செய்யப்படுகிறது.
உடுமலை :
மல்பெரி இலைகளில் பூச்சி தாக்குவதால், விவசாயிகளுக்கு பொருளாதார சேதம் ஏற்படுவதை தடுக்கும் முறைகள் குறித்து பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அப்துல் பாரூக் விளக்கினார்.
பட்டு உற்பத்தியில் பட்டுப் புழுக்களின் உணவுக்காக மல்பெரி செடி சாகுபடி செய்யப்படுகிறது. மல்பெரி செடி இலைகளில், நுனிப்பகுதியில் இளம் புழுக்கள் இருந்து கொண்டு இலையின் திசுக்களை உண்ணும்.
வளர்ந்த புழுக்கள் வேகமாக இலைகளை உண்டு, அதன் கழிவுகளை வெளியேற்றுவதால் பட்டுப்புழு உண்பதற்கு உதவாது. இதனால் இலைகள் மற்றும் செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். 15 முதல் 20 சதவீதம் மகசூல் குறைவதால் விவசாயிகளுக்கு பொருளாதார சேதம் ஏற்படுகிறது.பாதிப்பை தடுப்பது குறித்து பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அப்துல் பாரூக் கூறுகையில், முதலில் பாதிப்புக்கு உள்ளான செடியின் நுனிப்பகுதியை பாலித்தீன் பைகளில் சேகரித்து 0.5 சதவீதம் சோப்புக்கரைசலில் மூழ்கடித்து அழிக்கலாம். பின்னர், மின் விளக்கு பொரியின் மூலம் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பூச்சியின் தாக்குதல் அதிகமாக தென்பட்டால் வேம்பு சார்ந்த மருந்து தெளிக்க வேண்டும் என்றார்.