என் மலர்
உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனத்தில் தண்ணீர் கொண்டு செல்லும் கோட்டப்பாளையம் பொதுமக்கள்.
பல்லடம் அருகே குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி
- கோட்டப்பாளையம் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
- இங்கு வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டப்பாளையம் கிராம பகுதிகளில்முறையாக குடிநீர் வினியோகம் செய்யாததால் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுவதாகவும் இது குறித்து புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கோட்ட பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- கோட்டப்பாளையம் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் மிகக் குறைந்த அளவே விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இங்கு வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி வருகிறோம். மேலும் இங்குள்ள கிணறுகளில் சப்பைத் தண்ணீர் உள்ளது.
அதனை எடுக்க சுமார் 5 கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






