search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகோட்டை   நூலகத்தில் புரவலர் சேர்ப்பு
    X

    பெரியகோட்டை நூலகத்தில் புரவலர் சேர்ப்பு

    • லயன்ஸ் கிளப் தலைவர் யோகானந்த் நூலகத்திற்கு போட்டித் தேர்வு நூல்களை வழங்கினார்.
    • தினந்தோறும் நூலகத்தை சராசரியாக 67 வாசகர் பயன்படுத்துகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை பெரியகோட்டை ஊர் புற நூலகத்தில்தீவிர புரவலர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த நூலகத்தில் இதுவரை 1468 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    22 புரவலர்கள் சேர்ந்துள்ளனர். தினந்தோறும் நூலகத்தை சராசரியாக 67 வாசகர் பயன்படுத்துகின்றனர். இந்த நூலகத்தின் 23வது புரவலவராக பெரிய கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன் நூலக புரவலராக சேர்ந்து கொண்டார்.

    மேலும் புத்தங்கள் வைப்பதற்காக உடுமலை ராயல் லயன்ஸ் கிளப் தலைவர் யோகானந்த், சிவசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து நூலகத்திற்கு ஒரு நூல் அடுக்கு வழங்கினர். மேலும் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் லயன்ஸ் கிளப் தலைவர் யோகானந்த் நூலகத்திற்கு போட்டித் தேர்வு நூல்களை வழங்கினார்.

    Next Story
    ×