என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிநீர் குழாய் விரிவாக்கப் பணி துவக்க விழா நடைபெற்ற காட்சி.
பல்லடம் நகராட்சி 15வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் விரிவாக்கப் பணி தொடக்கம்
- ரூ.6லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் குடிநீர் விரிவாக்கப் பணி.
- குடிநீர் குழாய் விரிவாக்கப் பணி துவக்க விழா நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி 15வது வார்டு மேற்கு பல்லடம் கருப்பாண்டி வீதி, பழனியப்பா வீதி, எஸ்.வி.கிளினிக் வீதி, கொசவம்பாளையம் சாலை, கிருஷ்ணப்பா வீதி, ராமசாமி ஆகிய வீதியில் ரூ.6லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் குடிநீர் பகிர்மான குழாய் அமைத்து விரிவாக்கப் பணி துவக்க விழா நடைபெற்றது.
இந்த பணியை நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் துவக்கி வைத்தார். இதில் நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு, பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, நகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, நகர தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், குட்டி பழனிசாமி,சேகர்,அன்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






