என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிகளில் மின்இணைப்பு முழுமையாக சோதனை செய்ய உத்தரவு
    X
    கோப்புபடம்

    பள்ளிகளில் மின்இணைப்பு முழுமையாக சோதனை செய்ய உத்தரவு

    • பள்ளிகளில் மின் இணைப்புகளை சோதனை செய்ய மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    • மாநகராட்சி பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    திருப்பூர், செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கழிப்பறையில் மின் வயல் உரசி, மாணவி ஒருவருக்கு கழுத்து, கையில் எலும்பு முறிவு மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளில் மின் இணைப்புகளை சோதனை செய்ய மேயர் தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

    மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மின் இணைப்புகள், வயர்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்து, பராமரிப்பு மேற்கொள்ள, மாநகராட்சி பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பகுதி வாரியாக அனைத்து பள்ளிகளிலும் மின் இணைப்பு முழுமையாக சோதனை செய்து, வெளிப்பகுதியில் எங்கும் மின்சார வயர்கள் இல்லாத வகையில், பி.வி.சி., குழாய் பொருத்தப்படும். முழுமையாக அவற்றை சரி செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×