என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ காப்பீடு திட்ட 5-ம் ஆண்டு விழாவை முன்னிட்டுசிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு  பாராட்டு
    X

    பணியாளர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கப்பட்ட காட்சி.

    மருத்துவ காப்பீடு திட்ட 5-ம் ஆண்டு விழாவை முன்னிட்டுசிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பாராட்டு

    • சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
    • 5 பயனாளிகளுக்கு பரிசு பொருள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். பினனர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பாக பணி புரிந்த காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் வார்டு மேலாளர்களையும் சிறப்பிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த (அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை)மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியோரை பாராட்டி கவுரவிக்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தில் இலவச சிகிச்சை பெற்று நலமுடன் வாழும் 5 பயனாளிகளுக்கு பரிசு பொருள் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 5-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) கனகராணி. தேசிய சுகாதார பணிகள் மருத்துவர் அருண்பாடி, மாவட்ட திட்ட அலுவலர் அகிலன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×