search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் - நீதிபதி அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    பெண்கள் சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் - நீதிபதி அறிவுறுத்தல்

    • தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு சார்பில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • பெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறையும், நீதித்துறையும், சட்ட உதவி மையமும் செயல்படுகிறது.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு சார்பில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சட்டம் என்றால் என்ன? என்பது பற்றி பெண்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பணிபுரியும் இடத்தில் பெண்கள் செல்போனை பயன்படுத்துவது எப்படி? என்றும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் சினிமா நடிகர், நடிகை போல எண்ணி ஆண்களுடன் பழகி வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம். பெண்களுக்கு பாதுகாப்பாக காவல்துறையும், நீதித்துறையும், சட்ட உதவி மையமும் செயல்படுகிறது. மாணவர்கள் மன அழுத்தம் குறைக்க யோகா, உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும்" என்றார்.

    இதைத்தொடர்ந்து தாராபுரம் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு பேசுகையில், குடும்ப பெண்கள் யாரிடமும் தனிப்பட்ட விஷயங்களை தெரியப்படுத்தக் கூடாது. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அதிகம் உள்ளது. மருத்துவ துறையில் செவிலியர்களின் செயல்பாடு நீதித்துறைக்கு பயன்பட வேண்டும் என்றார். தாராபுரம் வக்கீல் சங்கச்செயலாளர் எம்.ஆர்.ராஜேந்திரன் ேபசுகையில், பெண்கள் பயன்படுத்தும் செல்போனில் ஏற்படும் பயன்களையும், அதனால் ஏற்படும் ஆபத்துக்களையும் எடுத்துரைத்தார். தாராபுரம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் கலைச்செழியன் பேசுகையில், கொரோனா தொற்றின் போது முன் களப்பணியாளராக செவிலியர்கள் மற்றும் நர்சிங் துறையை சேர்ந்தவர்களின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தன என்றார்.

    Next Story
    ×