search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரி விழிப்புணர்வு  பிரசாரம்
    X

    கோப்புபடம். 

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரி விழிப்புணர்வு பிரசாரம்

    • போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆதார் இணைப்பில் மந்தம் நிலவியது.
    • ஆர்.டி.ஓ., பண்டரிநாதன், ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.33 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் கமிஷன் அறிவுரைப்படி வாக்காளர் விவரத்துடன் ஆதார் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

    போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆதார் இணைப்பில் மந்தம் நிலவியது. அதன்பின் மாவட்ட அதிகாரிகளின் உத்தரவுப்படி, சட்டசபை தொகுதி வாரியாக, வாக்காளர் விழிப்புணர்வு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக, கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தி, இளம் வாக்காளராகிய கல்லூரி மாணவ, மாணவிகள் ஆதார் இணைக்க வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. திருப்பூர் தெற்கு தொகுதி சார்பில், செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறப்பு முகாம் நடந்தது. ஒரு மணி நேரத்தில் 500க்கும் அதிகமான வாக்காளர்கள், தங்கள் ஆதார் விவரத்தை இணைத்துள்ளனர்.திருப்பூர் வடக்கு தாலுகாவில், பொதுமக்களுக்கு ஆதார் இணைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்டோ பிரசாரம் துவங்கியுள்ளது.

    ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., பண்டரிநாதன், ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தார்.தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், ஆதார் இணைப்பு என்பது, வாக்காளரின் விருப்பம் என்றாலும், ஆதார் இணைப்பின் மூலமாக செம்மையான பட்டியலை தயாரிக்க முடியும். எனவே தேர்தல் கமிஷன் அழைப்பை ஏற்று வாக்காளர் தங்களின் ஆதார் விவரத்தை இணைக்க முன்வர வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 2.60 லட்சம் வாக்காளர் ஆதார் இணைத்துள்ளனர். இது மொத்த வாக்காளரில் 10 சதவீதம். ஆதார் இணைக்க போதிய அவகாசம் இருந்தாலும் முன்கூட்டியே விவரத்தை இணைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    Next Story
    ×