search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசுமைத்தமிழகம் இயக்கம் மூலம் 4,70,400 மரக்கன்றுகள்   நடவு செய்ய இலக்கு
    X

    கோப்புபடம். 

    பசுமைத்தமிழகம் இயக்கம் மூலம் 4,70,400 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு

    • மாவட்ட வனவியல் விரிவாக்க ஆய்வாளா் கிருஷ்ணசாமி, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
    • தமிழக அரசின் பசுமை தமிழகம் இயக்கத்தின் ஒருபகுதியாக திருப்பூா் மாவட்டத்திற்கு 2022- 23ம் ஆண்டில் 4,70,400 மரக்கன்றுகள் நடவுசெய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    அவிநாசி:

    திருப்பூா் மாவட்டம் அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பசுமை தமிழகம் இயக்கத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

    இதுகுறித்து அமைச்சா்கள் கூறியதாவது:-

    தமிழக அரசின் பசுமை தமிழகம் இயக்கத்தின் ஒருபகுதியாக திருப்பூா் மாவட்டத்திற்கு 2022- 23ம் ஆண்டில் 4,70,400 மரக்கன்றுகள் நடவுசெய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வேம்பு, புங்கன், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட 12 வகையான உள்நாட்டு மரக்கன்றுகள் வனத்துறை, தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த மரக்கன்றுகள் தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் விவசாய நிலங்கள், கல்வி நிலையங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்களில் நடப்பட்டு வளா்க்கப்பட உள்ளன. 2022 - 23ம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தில் 203.95 ஏக்கா் விவசாய நிலங்கள் 49.50 ஏக்கா் தனியாா் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் 29.75 ஏக்கா் அரசுக்கு சொந்தமான நிலங்கள் என மொத்தம் 28,320 ஏக்கா் பரப்பில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன என்றனா்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை வகித்தாா். ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநா் தேஜஸ்வி, திருப்பூா் சரக வன அலுவலா் சுரேஷ் கிருஷ்ணன், மாவட்ட வனவியல் விரிவாக்க ஆய்வாளா் கிருஷ்ணசாமி, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    Next Story
    ×