search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 56,000 வடமாநில தொழிலாளர்களின் விவரம் சேகரிப்பு
    X

    கோப்புபடம். 

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 56,000 வடமாநில தொழிலாளர்களின் விவரம் சேகரிப்பு

    • வடமாநில தொழிலாளர் விவரத்தை பதிந்து பராமரிக்க வேண்டும்.
    • இணையதளத்தில், விவரம் சேகரிக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்களும், 21 மாநிலங்களை சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர். சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாமல், பணியாற்ற தயாராக இருப்பதால் வட மாநிலத்தவர், இடைத்தரகர் மூலம் அதிகம் வரவழைக்கப்படுகின்றனர்.அவ்வாறு வரும் நபர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தி அடையாள ஆவணங்களை பெறுவது இல்லை. குற்ற பின்னணி குறித்தும் விசாரிப்பதில்லை. ஊராட்சி நிர்வாகம் உட்பட உள்ளாட்சிகளும், வெளிமாநில தொழிலாளர் பதிவேடுகளை பராமரிப்பதில்லை.

    மாநிலத்திற்குள் நுழையும் போதே, வடமாநில தொழிலாளரின் ஆதார் உள்ளிட்ட விவரங்களை பெற வேண்டும். ரெயில் நிலையம் போன்ற பகுதியில், வெளிமாநில மக்கள் வருகையை, பயோமெட்ரிக் சரிபார்ப்புடன் பதிவு செய்ய வேண்டும்.

    ஊராட்சிகளிலும் பொதுநபர் பதிவேடுகளை பராமரித்து வடமாநில தொழிலாளர் விவரத்தை பதிந்து பராமரிக்க வேண்டும். தொழிற்சாலைகள், வீடுகள் போன்ற விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பொது இணையதளத்தில் ஆதார் உள்ளிட்ட விவரங்களுடன், போலீசாரின் ஒப்புதல் பெற்ற தொழிலாளர் விவரம் பராமரிக்கப்பட வேண்டும். பொது இணையதளம், கோட்டம், மாவட்டம், மாநில அளவிலான ஒருங்கிணைப்புடன் இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு, குடியிருப்பு பகுதிகளின் பாதுகாப்பு கருதி, குற்ற பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.இது விஷயத்தில் வருவாய்த்துறை, தொழிலாளர்துறை, போலீஸ், ஊரக வளர்ச்சித்துறையை ஒருங்கிணைத்து, உரிய வழிமுறைகளை கையாள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் புகழேந்தி, ஊழல் ஒழிப்பு மற்றும் சட்ட பாதுகாப்பு குழுவுக்கு அறிவித்துள்ள அறிக்கையில்,வெளிமாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்ய, தமிழக அரசின் தொழிலாளர்துறை சார்பில்,8 வகையான விவரங்களை பெற்று பதிவு செய்கிறோம். https://labour.tn.gov.in/ism/users//login என்ற இணையதளத்தில், விவரம் சேகரிக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 56 ஆயிரத்து 630 தொழிலாளரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலை நிர்வாகங்களுடன் பேசி, வடமாநில தொழிலாளர் விவரத்தை, இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×