என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்கலம்-திருப்பூர் சாலையை  சீரமைக்க கோரிக்கை
    X

    கோப்புபடம். 

    மங்கலம்-திருப்பூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

    • மங்கலம் பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்.
    • பின்னலாடை தொழிலைப் பாதுகாக்க பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த மங்கலத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம் வருமாறு:- சிறுபான்மை சமுதாய மக்களை ஒடுக்குவதற்காக பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சிப்பது, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு கல்வி உதவித் தொகையை நிறுத்திய மத்திய அரசை கண்டிப்பது.

    மங்கலம் பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மங்கலத்தில் இருந்து திருப்பூா் செல்லும் சாலை குண்டும்குழியுமாக உள்ளதால் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. அவற்றை சீரமைக்க வேண்டும். மங்கலம் பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். பின்னலாடை தொழிலைப் பாதுகாக்க பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும். இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 3.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×