search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து திருப்பூரில்  விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
    X

    பேரணியில் பங்கேற்ற சைக்கிள் ரைடர்கள். 

    செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து திருப்பூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

    • 200க்கும் மேற்பட்ட சைக்கிள் ரைடர்கள் கலந்து கொண்டு 30 கிலோமீட்டர் வரை சைக்கிளில் பேரணியாகச் சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    திருப்பூர்:

    சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28ந்தேதி முதல் ஆகஸ்ட் 10ந்தேதி வரை 44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது . செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் நிர்வாகம் ,திருப்பூர் ரைடர்ஸ் கிளப் மற்றும் இந்தியன் யங் அமைப்பு சார்பில் திருப்பூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த சைக்கிள் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 200க்கும் மேற்பட்ட சைக்கிள் ரைடர்கள் கலந்து கொண்டு 30 கிலோமீட்டர் வரை சைக்கிளில் பேரணியாகச் சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×