search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்கப்பணி - நெடுஞ்சாலைத்துறை தலைமை  பொறியாளா் ஆய்வு
    X

    கோப்புபடம். 

    பல்லடம் - தாராபுரம் சாலை விரிவாக்கப்பணி - நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளா் ஆய்வு

    • முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 115 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
    • உதவி பொறியாளா் பாபு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உடன் இருந்தனா்.

    பல்லடம்:

    பல்லடம் - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை தற்போது இருவழி சாலையாக இருப்பதை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பல்லடத்தில் இருந்து புத்தரச்சல் வரையிலான 11.80 கிலோ மீட்டா் சாலை முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 115 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணியை சென்னை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவு தலைமைப் பொறியாளா் இரா.சந்திரசேகா் ஆய்வு மேற்கொண்டு பணியை தரத்துடன் விரைந்து முடித்திட அறிவுறுத்தினாா்.

    ஆய்வின்போது திருப்பூா் கண்காணிப்புப் பொறியாளா் பொ.வளா்மதி, திருப்பூா் கோட்டப் பொறியாளா் ஜெ.ரமேஷ்கண்ணா, திருப்பூா் தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி, பல்லடம் உதவி கோட்டப் பொறியாளா் தனலட்சுமி, உதவி பொறியாளா் பாபு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உடன் இருந்தனா்.

    Next Story
    ×