என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுபோதையில் இருக்கும் வாலிபரை படத்தில் காணலாம்.
திருப்பூரில்மோட்டார் சைக்கிளை அடமானம் வைத்து மதுகுடித்து செல்போனை தொலைத்த வாலிபர் - கண்ணீருடன் கதறிய தாய்; சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
- திருப்பூர் கோல்டன் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மே தினத்தன்று அரசு விதியை மீறி மது பாட்டில்களை விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
- அதிக மதுபோதையின் காரணமாக செல்போனை தொலைத்ததும் தெரிய வந்தது.
திருப்பூர்:
மே தினத்தை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு அரசு விடுமுறை அளித்திருந்தது. இந்நிலையில், திருப்பூர் கோல்டன் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் மே தினத்தன்று அரசு விதியை மீறி மது பாட்டில்களை விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்த பாரில் குடிக்க வந்த வாலிபர் ஒருவர் அதிகளவு மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் அங்கேயே படுத்து விட்டார். விடுமுறையன்று மகனை காணவில்லை என தேடிய தாய், மகன் டாஸ்மாக் பாரில் மது போதை தலைக்கேறிய நிலையில் இருப்பதை கேள்விப்பட்டு அங்கு வந்து பார்த்த பொழுது மகனின் நிலையை கண்டு பதறி அங்கிருந்தவர்கள் உதவியுடன்
போதையை தெளிய வைத்து, பைக்கை, செல்போன் எங்கே என்று கேட்ட போது, வாலிபர் பைக்கை அடமானம் வைத்து டாஸ்மாக் பாரில் மது குடித்தது தெரிய வந்தது. மேலும் அதிக மதுபோதையின் காரணமாக செல்போனை தொலைத்ததும் தெரிய வந்தது. இதையறிந்த தாய் பதறிய நெஞ்சத்துடன், விடுமுறை நாளன்று எவ்வாறு மது விற்பனை செய்கிறீர்கள் எனவும், எனது மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டீர்கள் என பாரில் மது விற்பனை செய்தவர்களிடம் கண்ணீர் மல்க ஆவேசத்துடன் பேசினார். மதுவால் சீரழிந்த மகனின் நிலை கண்டு தாய் ஒருவர் கண்ணீருடன் ஆதங்கமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






