search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் பா.ஜனதா சார்பில் நடந்த  மின்னொளி கிரிக்கெட் போட்டியில் பேட்டிங், பவுலிங் செய்து அசத்திய நடிகை நமீதா
    X

    நடிகை நமீதா பேட்டிங் செய்து கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த காட்சி.

    திருப்பூரில் பா.ஜனதா சார்பில் நடந்த மின்னொளி கிரிக்கெட் போட்டியில் பேட்டிங், பவுலிங் செய்து அசத்திய நடிகை நமீதா

    • நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.
    • இணை பொருளாளர் ரவிக்குமார் உள்பட மாவட்ட, மண்டல அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் கோப்பை மின்னொளி கிரிக்கெட் போட்டி திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள எஸ்.ஏ.கே. விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செய லாளர் ஏ.பி.முருகானந்தம் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் சின்னச்சாமி, செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மாநகராட்சி கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ், மாவட்ட பொருளாளர் நடராஜ், இணை பொருளாளர் ரவிக்குமார் உள்பட மாவட்ட, மண்டல அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதில் பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, டாஸ் போட்டு முதல் போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் நமீதா கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளுக் கிணங்க பந்து வீசியும், பேட்டிங் செய்தும் கலக்கினார். இந்த போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    பின்னர் நிருபர்களிடம் நமீதா கூறியதாவது:- மாவட்ட, மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகள் குடும்பமாக இந்த நிகழ்ச் சியை நடத்துகின்றனர். இந்த போட்டிக்கான அழைப்பிதழை பார்த்த பிறகு தான் இதில் 4 பெண்கள் அணிகள் கலந்து கொள்கின்றனர் என்று எனக்கு தெரிந்தது. உடனடியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் நான் எப்போதுமே பெண்களுக்கு உறுதுணை யாக இருப்பேன் என்றார். கர்நாடகா தேர்தல் தோல்வி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ஒருசில நேரங்களில் இதுபோன்று தோல்விகளை சந்திக்க நேரிடும். பா.ஜ.க. குறித்து பலர் பலர்விதமாக பேசுவார்கள். ஆனால் பா.ஜ.க. தலைவர்களை பொறுத்தவரை நேர்மறை சிந்தனையுடன் மட்டுமே செயல்படுவார்கள். எதிர்காலத்தில் நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×