search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப்பணிகள் - அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
    X

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி  பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற காட்சி.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப்பணிகள் - அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

    • மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்
    • காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    திருப்பூர்:

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.'கள ஆய்வில் முதலமைச்சா்' என்ற திட்டத்தின்கீழ் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு முதல்வரே நேரில் சென்று திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பொதும க்களுக்குத் தேவையான குடிநீா் விநியோகம், வடிகால் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, பொது கழிப்பிட வசதி, சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்து வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா். ஆய்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், திருப்பூா் மாநகராட்சி 4வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×