என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக ஏமாற்றி இளைஞர்கள்-இளம்பெண்களிடம் பணமோசடியில் ஈடுபடும் கும்பல்

- திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார்.
- பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தொகையை காட்டியுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து எளிய முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அந்த இளம்பெண் குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட டெலகிராம் செயலிக்குள் சென்று பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்தால் உங்களுக்கு கமிஷனாக பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி அவ்வாறே அந்த இளம்பெண் செய்துள்ளார்.
இவ்வாறு செய்ததன் மூலம் அவருக்கு கொஞ்சம் பணம் கிடைத்துள்ளது. பின்னர் அவருக்கு பண ஆசை மேலும் அதிகரித்தது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாக வைத்து அதில் வெற்றி பெற்றால் உங்களுக்கு கிடைக்கும் பணத்தொகை இவ்வளவு என்று அதிகப்படியான பணத்தை காட்டி இளம்பெண்ணுக்கு ஆசையை தூண்டியுள்ளனர். மேலும் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தொகையை காட்டியுள்ளனர். இதனால் அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட, ஒரு கட்டத்தில் வங்கியில் கடன் வாங்கி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். இவ்வாறு ரூ.17 லட்சத்து 76 ஆயிரத்து 800-ஐ அந்த இளம்பெண் முதலீடு செய்தார். அதற்காக கிரிப்டோ கரன்சி தொகையும் கணக்கில் வந்துள்ளது. ஆனால் லாபத்தொகை, முதலீடு தொகை உள்ளிட்ட எந்த பணத்தையும் இளம்பெண்ணால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவருக்கு தெரியவந்தது, பணத்தாசையில் ஏமாறப்பட்டோம் என்று.
இதைத்தொடர்ந்து அந்த பெண் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப்படி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி கூறும்போது, ஐ.டி., பொறியியல் பட்டதாரிகள் தான் இதுபோன்ற மோசடிகளில் அதிகம் சிக்குகிறார்கள். முதலில் கொஞ்சம் பணத்தை சம்பாதிப்பது போல் அனுப்பி வைக்கிறார்கள். அதன்பிறகு ஒவ்வொரு டாஸ்க் வைத்து பணத்தை அதிகம் முதலீடு செய்ய தூண்டுகிறார்கள். அதிக பணத்தை முதலீடு செய்த பின்னர் லாப தொகையும், முதலீடு தொகையும் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். இதுபோன்ற மோசடி ஆசாமிகளின் இணையதள முகவரிக்குள் சென்றாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தொழில்நுட்ப மாறுபாடுகளை செய்துள்ளனர். சமீபத்தில் திருப்பூரில் இதுபோன்ற மோசடிகளில் படித்த இளைஞர்கள் தான் அதிகம் சிக்கி வருகிறார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மோசடி ஆசாமிகள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகிறார்கள்' என்றார்.திருப்பூர், நவ.23-
திருப்பூரை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஐ.டி.துறையில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து எளிய முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அந்த இளம்பெண் குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட டெலகிராம் செயலிக்குள் சென்று பார்த்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாலோ செய்தால் உங்களுக்கு கமிஷனாக பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி அவ்வாறே அந்த இளம்பெண் செய்துள்ளார்.
இவ்வாறு செய்ததன் மூலம் அவருக்கு கொஞ்சம் பணம் கிடைத்துள்ளது. பின்னர் அவருக்கு பண ஆசை மேலும் அதிகரித்தது. அதன்பிறகு ஒவ்வொரு போட்டியாக வைத்து அதில் வெற்றி பெற்றால் உங்களுக்கு கிடைக்கும் பணத்தொகை இவ்வளவு என்று அதிகப்படியான பணத்தை காட்டி இளம்பெண்ணுக்கு ஆசையை தூண்டியுள்ளனர். மேலும் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதன் மூலமாக கிடைக்கும் லாபத்தொகையை காட்டியுள்ளனர். இதனால் அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட, ஒரு கட்டத்தில் வங்கியில் கடன் வாங்கி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார். இவ்வாறு ரூ.17 லட்சத்து 76 ஆயிரத்து 800-ஐ அந்த இளம்பெண் முதலீடு செய்தார். அதற்காக கிரிப்டோ கரன்சி தொகையும் கணக்கில் வந்துள்ளது. ஆனால் லாபத்தொகை, முதலீடு தொகை உள்ளிட்ட எந்த பணத்தையும் இளம்பெண்ணால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவருக்கு தெரியவந்தது, பணத்தாசையில் ஏமாறப்பட்டோம் என்று.
இதைத்தொடர்ந்து அந்த பெண் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப்படி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி கூறும்போது, ஐ.டி., பொறியியல் பட்டதாரிகள் தான் இதுபோன்ற மோசடிகளில் அதிகம் சிக்குகிறார்கள். முதலில் கொஞ்சம் பணத்தை சம்பாதிப்பது போல் அனுப்பி வைக்கிறார்கள். அதன்பிறகு ஒவ்வொரு டாஸ்க் வைத்து பணத்தை அதிகம் முதலீடு செய்ய தூண்டுகிறார்கள். அதிக பணத்தை முதலீடு செய்த பின்னர் லாப தொகையும், முதலீடு தொகையும் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். இதுபோன்ற மோசடி ஆசாமிகளின் இணையதள முகவரிக்குள் சென்றாலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு தொழில்நுட்ப மாறுபாடுகளை செய்துள்ளனர். சமீபத்தில் திருப்பூரில் இதுபோன்ற மோசடிகளில் படித்த இளைஞர்கள் தான் அதிகம் சிக்கி வருகிறார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மோசடி ஆசாமிகள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகிறார்கள்' என்றார்.