என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் தொழில் வர்த்தக சபை ஆலோசனை கூட்டம்
    X

    தொழில் வர்த்தக சபை ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி. 

    உடுமலையில் தொழில் வர்த்தக சபை ஆலோசனை கூட்டம்

    • தலைவர் அருண் கார்த்தி தலைமை வகித்தார்.
    • உடுமலை தொழில் வர்த்தக சபை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.

    உடுமலை:

    2023 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய ஏதுவாக வரி சீர்திருத் தங்கள், வரிச் சலுகைகள் குறித்த கருத்துக்களை பதிவு செய்ய உடுமலை தொழில் வர்த்தக சபை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.தலைவர் அருண் கார்த்தி தலைமை வகித்தார். இதில் வரி சட்ட வல்லுநர் ஆடிட்டர் அனந்த சுப்ரமணியன், கோவை எஸ்ஸார் என்ஜினீயரிங் (ஏற்றுமதி வர்த்தகம் ) நிறுவனர் ராஜ ரத்தினம், தமிழ்நாடு தென்னை நார் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பூசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.இக் கூட்டத்தில் பெறப்பட்டுள்ள ஆலோசனைகள் வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய குறிப்பேடாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என செயலாளர் ஆடிட்டர் கந்தசாமி கூறினார்.

    Next Story
    ×