search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் ஆதார் சிறப்பு திருத்த முகாம்: 30-ந்தேதி வரை நடக்கிறது
    X

    கோப்புப்படம்

    உடுமலையில் ஆதார் சிறப்பு திருத்த முகாம்: 30-ந்தேதி வரை நடக்கிறது

    • முகாமை நகராட்சித்தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன் மற்றும் கவுன்சிலர்கள் துவக்கி வைத்தனர்.
    • கை ரேகை பதிவு உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் தொடங்கியது. வார்டு வாரியாக வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. உடுமலை நகராட்சியிலுள்ள 33 வார்டுகளிலும், அஞ்சல் துறையுடன் இணைந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடக்கிறது.ருத்ரப்ப நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 26, 27, 28, 29, 30, 31, 32 மற்றும் 33வது வார்டுகளுக்கு நடந்தது. இங்கு நாளை வரை முகாம் நடக்கிறது.

    முகாமை நகராட்சித்தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன் மற்றும் கவுன்சிலர்கள் துவக்கி வைத்தனர். 14-ந் தேதி முதல், 17-ந் தேதி வரை சதாசிவம் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில்15, 16, 17, 19, 20, 21, 22, 23 மற்றும் 25வது வார்டு மக்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.

    தாராபுரம் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 18 முதல் 21-ந் தேதி வரை, 1, 2, 3, 4, 5, 13 மற்றும் 14வது வார்டு மக்களுக்கு நடக்கிறது. பார்க் நகராட்சி பள்ளியில்வரும் 22 முதல் 25-ந் தேதி வரை 10, 11, 12, 13, 18 மற்றும் 24வது வார்டுகளுக்கும், ராஜலட்சுமி நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில் வரும் 26 முதல், 30-ந் தேதி வரை 6, 7, 8 மற்றும் 9வது வார்டு மக்களுக்கும் ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடக்கிறது. இதில்முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், கை ரேகை பதிவு உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×