search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே நேர்கோட்டில் 5 கோள்கள் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்
    X

    கோப்புப்படம்

    ஒரே நேர்கோட்டில் 5 கோள்கள் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

    • திருப்பூர் வாழ் மக்கள் பலரும் வெறும் கண்களாலே பார்த்து பரவசமடைந்தனர்.
    • வானியியல் சிந்தனையை தூண்ட முடியும்.

    திருப்பூர்:

    சூரிய குடும்பத்தில் 9 கோள்கள் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து நீள் வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அவ்வகையில் சில கோள்கள் நேர்கோட்டில் வரும் நிகழ்வும் நடக்கிறது. அந்த வரிசையில் செவ்வாய், வெள்ளி, சனி, வியாழன் ஆகிய நான்கு கோள்கள் கடந்த ஏப்ரல் 29-ந்தேதி ஒரே நேர்கோட்டில் சந்தித்தன.

    இந்த அணிவகுப்பில், நேற்று முன்தினம் புதன் கோளும் இணைந்தது. சூரியன் உதயமாவதற்கு சற்று முன்பு புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் காட்சியளித்ததை திருப்பூர் வாழ் மக்கள் பலரும் வெறும் கண்களாலே பார்த்து பரவசமடைந்தனர். இதுகுறித்து கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:-

    தென் கிழக்கு வானில் சூரியன் உதிப்பதற்கு முன் இந்நிகழ்வு தென்பட்டது. இவற்றில் வெள்ளி கோள், மிகுந்த வெண்ணிற ஒளியுடனும், வியாழன் ஒளி வீசக் கூடியதாகவும், சந்திரன் மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது.செவ்வாய்க்கோள் மட்டும் அதன் சிவப்பு நிறத்தன்மையால் மற்ற கோள்களில் இருந்து மாறுபட்ட ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்தது.இந்திய நேரப்படி இங்கு மட்டுமே கோள்களை ஒரே நேர்கோட்டில் வருவதை முழுமையாக காண முடியும். மற்ற நாடுகளில் ஓரிரு கோள்கள் வேண்டுமானால் தென்படக்கூடும்.

    இவ்வாறு ஒரே நேர்கோட்டில் ஐந்து கோள்கள் தோன்றும் நிகழ்வு 2002ல் நடந்தது. அடுத்த, 2040ல் தான் நிகழும். இதுபோன்ற நிகழ்வை பள்ளி மாணவர்களை உற்று நோக்க செய்வதன் வாயிலாக வானியியல் சிந்தனையை தூண்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×